மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் நேற்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதனை பிரதமர் அலுவலகம் இரு தலைவர்களின் புகைப்படத்துடன் டுவிட் செய்துள்ளது.
2022-ம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக சரத்பவார் போட்டியிடக் கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருந்தாலும் இந்த யூகங்களை சரத்பவார் மறுத்துள்ளார்.
பிரதமர் மோடி - சரத்பவார் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நடந்தது. இரு தலைவர்களும் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருவருக்கும் இடையே அரசியல் குறித்து விவாதிக்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனா நிலைமை குறித்து விவாதித்ததாக சரத் பவார் தெரிவித்தார்.
இதுகுறித்து சரத்பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தேசிய நலனுக்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படடது என தெரிவித்துள்ளார்.
மைசூரு மிருகக்காட்சி சாலை ஊழியர்களுக்கு உணவு பொருட்க
ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஆப
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் வரும் ஒக்ட
பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட
ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண
குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ
இந்தியாவுக்கான கொலம்பியா, உருகுவே, ஜமாய்க்கா, ஆர்மீனி
டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ
நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம்
