வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணாணந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.இந்த நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமிழ் அரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது.
எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.இந்த நிலையில் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகர சபைத் தலைவராகத் தொடர அவர் விரும்பாத காரணத்தினால் பதவி விலகுகின்றார் என்று தவிசாளர் கோ.கருணாணந்தராசா தெரிவித்தார்
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை மோசமாகியுள்ளதாக
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவ
கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின்
ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்
