மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இவரது மந்திரி சபையில் கலாசார துறை மந்திரியாக இருப்பவர் உஷா தாகூர்.
இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் பலர் இவருடன் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடன் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு ரூ.100 நன்கொடை அளிக்க வேண்டும் என உஷா தாகூர் தெரிவித்துள்ளார்.
கண்ட்வா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆதரவாளர்கள் என்னுடன் செல்பி புகைப்படங்களை எடுப்பதில் நிறைய நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கால தாமதமாக கலந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே என்னுடன் செல்பி புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள் பா.ஜ.க.வின் உள்ளூர் மண்டல கருவூலத்தில் ரூ.100 டெபாசிட் செய்ய வேண்டும்.
அனேக இடங்களில் மக்கள் மலர்களுடன் என்னை வரவேற்கின்றனர். பூக்களில் லட்சுமிதேவி வசிப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே கறைபடாத விஷ்ணுவைத் தவிர வேறு எவராலும் பூக்களை ஏற்க முடியாது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை
தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற
ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்
கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பாஜ.வில் உட
இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள்இ இ
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க
சென்னையில் அனைவருக்கும்
டெல்லியில் இ- சைக்கிள் வாங்கும் முதல் 10 ஆயிரம் பேருக்க இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பர மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ இந்திய அரசாங்கமும் விவசாயிகளும் அமைதி காக்க வேண்டும் ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூற கரீபியன் தீவு நாடான ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந
