ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 20 பேர் பலியாகினர். ஜெர்மனியில் தொடர்ந்து பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு மற்றும் மத்திய ஜெர்மனியின் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
அக்ர்வெய்லர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர். ஊருக்குள் வெள்ளம் திடீரென பாய்ந்ததால், வீடுகள் இடிந்தன. கார்கள் அடித்துச் செல்லப்பட்டு, சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
வீடுகளின் மீது தவித்து வரும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலரை காணவில்லை. பல இடங்களில் வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெர்மனியின் பிரபல நகரமான வடக்கு ரினே வெஸ்ட்பாலியாவின் பெரும்பாலான பகுதிகளில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட அரிப்புகளால் சாலைகள் கடுமையாக சேதமாகி துண்டிக்கப்பட்டுள்ளன.
தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி
உக்ரைன் மீதான போர் இரண்டு வாரங்கள் கடந்தும் போர் தொ
ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜ கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுக வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த, டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க
