More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க தமிழகம் தயாராக உள்ளது: கே.எஸ்.அழகிரி பேட்டி
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க தமிழகம் தயாராக உள்ளது: கே.எஸ்.அழகிரி பேட்டி
Jul 16
கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்க தமிழகம் தயாராக உள்ளது: கே.எஸ்.அழகிரி பேட்டி

கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம் தயாராக உள்ளது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது.



தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொடங்கிய பேரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணி தி.நகர் திருமலைப்பிள்ளை சாலை வழியாக சென்று அங்குள்ள காமராஜர் இல்லத்தில் நிறைவடைந்தது.



இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.இப்பேரணியில், மேலிட பொறுப்பாளர் ரிவல்ல பிரசாத், மூத்த தலைவர்கள் தங்கபாலு, செல்லக்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, எம்பிக்கள் ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், பொருளார் ரூபி மனோகரன் எம்எல்ஏ, மகிளா காங்கிரஸ் தலைவி சுதா, சுமதி அன்பரசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், அடையார் துரை, ரஞ்சன் குமார், ஜெ.டில்லிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.



பேரணியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் மேகதாது அணையை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மின்சார தேவைக்காக மேகதாது அணை கட்டுவதாக கர்நாடக அரசு தெரிவிக்கின்றது. இதனால், கர்நாடகத்திற்கு மின்சாரத் தேவையென்றால் தமிழகமே மின்சாரத்தை வழங்க தயாராக உள்ளது. எனவே மேகதாது அணைகட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb20

மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதிà®

Oct02

உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல

Apr27

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் நே

Aug05

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக்

Aug19

போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பிய

Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Aug15

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்

Feb08

15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமதà

Apr26

ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்துà®

Oct26

தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்கà

Jun19

மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வரà

Mar25

தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சேலம் தொகுதியில் போட்டிய

Dec30

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத

Jul27

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியரà¯

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் நà®

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (04:53 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (04:53 am )
Testing centres