கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்தில் பயணிகளுக்கு எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்கிய நடத்துனருக்கு, பேருந்து நிழற்குடையில் வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவையில் இருந்து நேற்று காலை திருப்பூருக்கு 57 பயணிகளுடன் அரசுப்பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் நடத்துனர் பயணிகளுக்கு எச்சிலை தொட்டு பயணச்சீட்டு கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், கொரோனா பரவலுக்கு வழி வகுக்கும் என்பதால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி உள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத நடத்துனர், தொடர்ந்து அவ்வாறே பயணச்சீட்டை கொடுத்து உள்ளார்.
இதனை அடுத்து பேருந்தில் பயணித்த ஒருவர், இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சுகாதாரத் துறையினர் பேருந்து திருப்பூருக்கு வருவதற்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை செய்பவர்களுடன் தயார் நிலையில் காத்திருந்து உள்ளனர்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் வந்தபோது, அரசுப்பேருந்தை நிறுத்திய அதிகாரிகள் அருகில் இருந்த பேருந்து நிழற்குடையில் வைத்து நடத்துனருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட வேண்டாம் என்றும் நடத்துனருக்கு அறிவுறுத்தினர்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்
தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்
கவிஞர் தாமரைக்கும் அவரது கணவர்
இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகே
