தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேவை புரிந்து வரும் ஆட்டோ ஓட்டுநருக்கு, மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பி.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக். இவர் கொரோனா இரண்டாவது அலையின்போது, தனது ஆட்டோவில் நோயாளிகளை கட்டணமின்றி இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சேவை புரிந்து வந்தார். இவரது தன்னலமற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பி.சி.பட்டியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட நேற்று முன்தினம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
வழியில் நின்றிருந்த கார்த்திக்கின் ஆட்டோவில் மருத்துவத்திற்கு இலவசம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததை பார்த்த ஆட்சியர் முரளிதரன் உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கினார். தொடர்ந்து, ஆட்டோவில் நின்றிருந்த கார்த்திக்கிடம் சென்ற ஆட்சியர், அவரது சேவையை கவுரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் பி.சி.பட்டி கிராம மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அரசு முயல வேண்டாம் எ
மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ண இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவா திருமண நிகழ்வின் போது திடீரென மணப்பெண்ணை மாப்பிள்ளை அ நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி தமிழக முதலமைச்சர்
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார