நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முன்னணி நடிகராக வளர்ந்து வரும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைரி’. அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பவித்ரா நடித்துள்ளார். புலனாய்வு த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு தற்போது அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். விஜய் பாண்டியின் ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் மற்றும் பிஜி முத்தையா இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘தேஜாவு’ என்று வித்தியாசமான பெயரோடு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அருள்நிதியை பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தேஜாவு என்றால் ‘இப்போது நடக்கும் விஷயம்’ எப்போதோ நடந்த மாதிரி இருப்பதுதான். அதனால் அதுபோன்ற படமாகதான் இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை விரைவில் முடிக்கவுள்ள அருள்நிதி, பிரபல யூட்யூப் சேனலான எரும சாணி யூடியூப் சேனலின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.