நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்லர் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். ஜமீல் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. த்ரில்லரில் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ’மை நேம் இஸ் ஸ்ருதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகா நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜா டஸ்சா இயக்கும் இப்படத்தை பொம்மாக் சிவா தயாரிக்கவுள்ளார். சைக்கலாஜிகல் எத்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘ஒன் நாட் பைவ் மினிட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதை என்னவென்றால், வீட்டில் தனிமையில் இருக்கும் கதாநாயகி, எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முழுப்படமாக உருவாகவுள்ளது.
சாதாரண படங்கள் போன்று இல்லாமல் இந்த படத்தில் ஸ்பெஷலான விஷயமும் உள்ளது. இந்த படம் ஒரே ஷாட்டில் ஒரு முழுப்படத்தையும் எடுக்கவுள்ளனர் படக்குழுவினர். இது தமிழில் புதுவித முயற்சியாக உருவாகவுள்ளது. இதில் ஹன்சிகா மட்டுமே நடிக்கவுள்ளார். வேறு எந்த நடிகரும் இந்த படத்தில் இல்லை. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இதேபோன்று சமீபத்தில் வெளியாகி தேசிய விருதுபெற்ற ‘ஒத்த செருப்பு’ படத்தில் பார்த்திபன் ஒரே ஆளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.