தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இந்நிலையில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 16 நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாகவும், ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்குமுன் இயக்குனர் வெற்றிமாறன், சங்கத்தலைவன் என்ற படத்தினை தயாரித்து வெளியிட்டிருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’ திரைப்படத்துக்கான கதையை எழுதி, பைவ் ஸ்டார் கதிரேசனுடன் இணைந்து தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்
என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று 
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு
விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இச
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்
நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
