டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்துச் சண்டை போட்டிகளுக்கான நடுவராக, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தலைமை பெண் பொலிஸ் ஆய்வாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 23ம் திகதி ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் முதல் இலங்கை பெண் குத்துச்சண்டை நடுவர் என்ற பெருமையை தலைமை ஆய்வாளர் டி.நெல்கா ஷிரோமாலா பெற்றுள்ளார்.
காலி, ரிபன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ள நெல்கா, 1997 ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளதுடன், பொலிஸ் கழகம் சார்பில் 2001 ஆம் ஆண்டு முதல் குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
நெல்கா ஷிரோமாலா முதல் பெண் பொலிஸ் குத்துச்சண்டை அணி உறுப்பினராக 2002 இல் பொலிஸ் குத்துச்சண்டை அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் பொலிஸ் அதிகாரி ஆவார்.
நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் உள்ளூர் குத்துச் சண்டை போட்டிகளின் நடுவராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளின் நடுவராகவும் செயற்பட்டு வரும் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் நெல்கா ஷிரோமாலா, 2017 ஆம் ஆண்டில் ஆசியாவின் சிறந்த குத்துச் சண்டை நடுவருக்கான விருதினை பெற்றிருந்தார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய
சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
ஜனவரி 18 , 2021
குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட் உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்ப ரஷியா- உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தையில் சிறிது முன உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மேசமாக பாதிக்கப்பட் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாட், உ அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ