ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும்.
இஸ்லாமிய சமூகம், தமது கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாகவும் இதனை நான் பார்க்கிறேன்.
அனைத்து சமயத் தலைவர்களும் மனித சமூகத்தின் நல்வாழ்வுக்குத் தேவையான உலகப் பொதுவான நன்நெறிகளை எமக்குத் தந்துள்ளனர்.
சமூக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கும், அவற்றின் பங்களிப்பு மகத்தானதாகும். இது, உலகின் தொடர்ச்சியான நல் இருப்புக்கு இன்றியமையாத காரணியாகும்.
இஸ்லாத்தின் இறுதித் தூதராகக் கருதப்படும் முஹம்மத் நபியவர்களின் வாழ்வியலைப் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்பார்க்கும் ஈருலக வெற்றியையும் இறை நெருக்கத்தையும் அடைய, இந்த ஹஜ் பண்டிகைக் காலம் உதவும்.
கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணமாக, முன்னரைப் போலவே பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் செயற்படுவதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது, அனைவரதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை நோக்காகக் கொண்டதாகும். இந்த விடயங்களில் விசேட கவனம் செலுத்தி, இந்தப் பண்டிகைக் காலத்தில் சமயக் கிரியைகளில் ஈடுபடுமாறு நினைவூட்ட விரும்புகிறேன்.
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
வவுனியாவில் வீதிகளில் முகக்கவசங்கள் அணியாமல் உரிய மு
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொ
உடப்பு - கட்டகடுவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி ஒன்றரை
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூ
