கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா. கர்நாடக மாநில ஆளுநரை சந்தித்து பிற்பகலில் ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா. பாஜக மேலிட உத்தரவின் பேரில் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார் .முதல்வராக தொடர வேண்டுமென மடாதிபதிகள் வலியுறுத்தி வந்த நிலையில் எதியூரப்பா இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து அறிவித்துள்ள அவர் , கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் . ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். ஜூலை 16 இல் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் மோடி, அமித் ஷா ம், நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார்.
பாஜகவில் 75 வயதை தாண்டியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுவது கட்சியின் வழக்கம். எடியூரப்பாவுக்கு 75 வயதுக்கு மேல் ஆகி உள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து கட்சிக்குள் வலியுறுத்தப்பட்டு வந்தது. எடியூரப்பா ராஜினமா செய்யக்கூடாது என அவர் சார்ந்த லிங்காயத் சமுதாய மடாதிபதிகள் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். இந்த சூழலில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையி
பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு
