ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்து கொண்டார். முதல் சுற்றில் வென்ற பவானி தேவி இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்தார்.
வாள்வீச்சில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.
தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி தனது டுவிட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிட்டார்.
இந்நிலையில், தமிழக வீராங்கனை பவானி தேவியை பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நீங்கள் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்தீர்கள். அதுதான் முக்கியம். வெற்றியும் தோல்வியும் வாழ்வின் ஓர் அங்கம். உங்கள் பங்களிப்பைக் கண்டு இந்த தேசம் பெருமை கொள்கிறது. இந்திய மக்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உங்களது முயற்சியைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொரு படி என பதிவிட்டுள்ளார்.

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உளà
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நà
மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கà துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாà பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக் இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதà கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதà®
