நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அத்தியடிய பகுதியில் கல்கிசை காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 210 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
50, 41 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 21 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மொரட்டுவ பகுதியில் 25 வயது சந்தேகநபரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கிராண்ட்பாஸ் பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
ஹங்வெல்ல பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சற்று முன்
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா பொதுச் சபையில் சர்வதேச நாணய ந
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும்
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொட
நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
