வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் தேர்வு செய்தது.
அதனபடி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அதிர்ச்சி அளித்தனர். 45 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது.
அடுத்து இறங்கிய வேட். சம்பா, வெஸ் அகர் பொறுமையுடன் ஆடினர். வேட், சம்பா தலா 36 ரன் எடுத்து அவுட்டாகினர். வெஸ் அகர் 41 ரன் எடுத்தார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.1 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல் அவுட்டானது
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஹொசைன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹொப் 38 ரன்னில் வெளியேறினார். 72 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய நிகோலஸ் பூரன், ஜேசன் ஹோல்டர் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 38 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. பூரன் அரை சதமடித்து 59 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஹோல்டர் 52 ரன்னில் வெளியேறினார்.
இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
2022 ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளிலிருந்து சிஎஸ்
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
