More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சீனாவில் இதுவரை இல்லாத அளவில் மழை பதிவு - பலி எண்ணிக்கை 63 ஆனது
சீனாவில் இதுவரை இல்லாத அளவில் மழை பதிவு - பலி எண்ணிக்கை 63 ஆனது
Jul 26
சீனாவில் இதுவரை இல்லாத அளவில் மழை பதிவு - பலி எண்ணிக்கை 63 ஆனது

சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர்.  பொருட்களும் சேதமடைகின்றன.



இதற்கிடையே, ஹெனான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.



அவா்களில் 12 பேர் சுரங்க ரெயில் பயணிகளும் அடங்குவா். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. மழை மற்றும் வெள்ளத்தால் ரூ. 75,000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 



மழையை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.



மொத்தம் 12.4 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர். சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன. இதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.



தொடர்ந்து கனமழை இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது.



இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி நேற்று வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை காணவில்லை. 8.52 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 876.6 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 24,474 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.



இதுதொடர்பாக, ஹெனான் மாகாண நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாகாணத்தின் சில பகுதிகளில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பெய்யும் மழை அளவானது பதிவாகி உள்ளது என தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr18

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக

Sep21

450 இடங்களைக் கொண்ட ரஷ்யா பாராளுமன்றத்துக்கு கடந்த 17-ம் à®

Aug15

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்நà

Mar27

 உக்ரைன் மீது ரஷ்ய போர்க் கப்பல் சரமாரி ஏவுகணை தாக்கà¯

Mar03

ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலாà®

May21

மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இதன் தலைநகரான கவுதமாலா à

Mar07

உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்à

Mar09

அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்

Feb15

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்à®

Jun26

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அரà

May08

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரà

Jul07

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப

May04

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தà¯

Feb06

கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்

Mar19

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (06:52 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (06:52 am )
Testing centres