கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற 8 வயது மகள் உள்ள நிலையில், கடந்த ஜூலை 12-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு ‘குகன் தாஸ்’ என பெயர் சூட்டி இருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தை பிறந்தபோது ‘18 வருடங்களுக்குப் பிறகு அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்’ என்று தெரிவித்திருந்த சிவகார்த்திகேயன், தற்போது தனது தந்தையின் பெயரான ‘தாஸ்’ என்பதை தனது மகனுக்கு சூட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென
தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்
சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற
கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா