நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசால் முடிவு செய்யப்படும். சுகாதார அதிகாரிகள் நிலைமையை அவ்வப்போது மதிப்பாய்வு செய்த பிறகு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
நாடு தற்போது கொரோனா சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள அதேவேளை, பொருளாதாரம் மற்றும் சமூக அம்சங்களை சமநிலையாக அரசு பேணி வருகின்றது.
எனினும், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும் அல்லது நாடு முடக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் உணர்ந்தால், தயக்கமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அத்தோடு, மீண்டும் அறிவிக்கும் வரை பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்” – என்றார்.
தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்கான முன்வரு வோம் என
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்இ இந்தியப் பிரத
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுந
இலங்கை அரசினால் தேசிய நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ள கல
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சர
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
