தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் தினேஷ் 26 ரன்னும், கேப்டன் மொகமது 19 ரன்னும் எடுத்தனர்.
திருச்சி அணி சார்பில் பொய்யாமொழி 3 விக்கெட்டும், சரவண் குமார் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அமித் சாத்விக், முகுந்த் தலா 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். மொகமது அட்னன் கான் 9 ரன்னில் வெளியேறினார்.
நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், திருச்சி அணி 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 47 ரன்னும், ஆதித்யா கணேஷ் 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

டோக்கியோ
டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் ஆட்டம் இ
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வ
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வ
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
