இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கையில் நாளாந்தக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் நேற்றுமுன்தினம் 1,900 ஐத் தாண்டியுள்ளது.
இதேவேளை, நேற்று 2,300 இற்கும் மேற்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்.
சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வந்தமையால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.
எனவே, மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடித்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் மீண்டும் இறுக்கமான கட்டுப்பாடுகளை நாம் விதிக்க வேண்டி வரும்.
கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் – என்றார்.
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நா
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமு
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களி
நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ
காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று
நாளைய தினமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எ
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய
