ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதில், ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த பிற அதிகாரிகளும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை.
இந்நிலையில், ஐ.நா. சபை வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.

உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய
வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சுமார் 7ஆயிரம் ஏக்
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனுக்கு திடீரென்à
கொரோனா வைரஸ் தொற்றினை ஒழிக்க உதவுகிற வகையில் பணக்கார à®
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவிà®
உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்à
ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கே அமைந்த லோகர் மாகாணத்தà
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றà®
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கà¯
அமெரிக்க மாகாணத்தை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்
