ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்டகால போர் நடந்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக இருதரப்புக்கு இடையிலும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், இதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அமெரிக்க படைகள் வாபஸ் அறிவிப்பு வெளியான பின், பல்வேறு மாவட்டங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தலிபான்கள் இறங்கியுள்ளனர். இதனால், அவர்களை அழிக்க அந்நாட்டு ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நங்கர்ஹர், லக்மான், கஜ்னி, பக்திகா, கந்தகார், ஜாபுல், ஹெராட், ஜவ்ஜன், சமங்கன், ஃபரியாப், சார்-இ போல், குண்டூஸ், ஹெல்மண்ட், நிம்ரூஸ், பாக்லான் மற்றும் கபீசா உள்ளிட்ட பகுதிகளில் தலிபான்களை வேட்டையாடும் பணியில் ராணுவம் ஈடுபட்டது.
இதில் கடந்த 24 மணி நேரத்தில் தலிபான் பயங்கரவாதிகள் 303 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 125 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு ராணுவ அமைச்சம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி ம
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது
அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து ஈரானின் இஸ்ல
ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக
உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து
சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான ப
அமெரிக்காவில் கார் திருட்டில் ஈடுபட்ட 13 வயது சிறுவன் ப
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.
