சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளார். அதேபோல் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தடை கோரி சிக்யா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த குனீத் மொங்கா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழில் சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து ‘சூரரைப்போற்று’ படத்தை தயாரித்ததாகவும், இந்தி ரீமேக் உரிமையை விற்றதில், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி தன்னுடன் கலந்து ஆலோசிக்காமல் சூர்யா தன்னிச்சையாக செயல்பட்டுள்ளதாகவும் குனீத் மொங்கா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘சூரரைப்போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும் இரு தரப்பினரும் நட்பு ரீதியாக கலந்துபேசி இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்
தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்
கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர
ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா
சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்ற
தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான
ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்
கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலி
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பட
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் வாடாத முல்லைய
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங