மும்பை காவல்துறையை கதிகலங்க வைத்த வெடிகுண்டு மிரட்டல்!
Aug07
மும்பை காவல்துறையை கதிகலங்க வைத்த வெடிகுண்டு மிரட்டல்!
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரென ஒரு தொலைபேசி வந்துள்ளது. தொலைபேசியில் எதிர்முனையில் பேசிய மர்ம நபர், மும்பையில் நான்கு இடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதனால் ஒட்டுமொத்த மும்பை போலீஸ், வெடிகுண்டு செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் ஜிஆர்பி குழு முக்கியமான இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெடிகுண்டுகள் தென்படவில்லை.
அதன்பிறகுதான் போலீஸை ஏமாற்றுவதற்கான வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மர்ம நபர் போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்பிறகு போலீசார் நிம்மதி அடைந்து, போன் செய்த நபரை தேடி வருகின்றனர்.