ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.
ஜப்பானின் மேற்கு நகரில் உள்ள செடாகயா வார்டு பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்த போது, ரெயிலில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென கத்தியால் கண்மூடித்தனமாக சக பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உள்பட மொத்தம் 10 பேர் காயம் அடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கத்திக்குத்து தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ஒரு கத்தியும் செல்போனும் கைப்பற்றப்பட்டது. சிறிது நேரத்தில் தாக்குதல் நடத்திய நபரையும் போலீசர் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கத்திக்குத்து தாக்குதல் நடந்த இடமானது ஒலிம்பிக் தொடரின் குதிரையேற்றம் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு சில மைல் தூரங்களில்தான் அமைந்துள்ளது. இதையடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
உக்ரைனில் போர்க்குற்றங்களைச் செய்யும் எந்தவொரு ரஷ்ய
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் நேற
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அர
ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
நைஜீரியாவைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்பான போகா ஹராமின்
உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய இராணுவத்தின் 'முதுகெலும
உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெறும் போரை நிறுத்த ரஷ்யா முன
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபர் யோவேரி மு
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி
கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாட
