தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த அந்நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை கண்டித்து தென்ஆப்பிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் வன்முறைகளில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறை அதிகாரி சிங்கபாகோ நச்மாலோ கூறுகையில், ‘‘சிறையில் நடக்கும் வழக்கமான மருத்துவ பரிசோதனை ஜேக்கப் ஜூமாவை மருத்துவமனையில் சேர்க்க தூண்டியது. சிறையில் முன்னாள் அதிபரின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய ராணுவ சுகாதார சேவையின் ஈடுபாடு தேவைப்படுகிறது’’ என்றார்.
அதேவேளையில், ஜேக்கப் ஜூமா உடலில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவரின் தற்போதைய நிலை என்ன? என்கிற தகவல்கள் வெளியாகவில்லை.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
மத்திய இத்தாலியின் ஒரு பகுதியில் திருமணம் செய்து கொள்
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
அமெரிக்காவின் உட்டா மாகாணம் கனோஸ் நகருக்கு அருகே மிகப
ஆப்கானிஸ்தான் நாட்டை
பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம். அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூ உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதி அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த
