ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனம் சாா்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் ரந்தீப் குலேரியாவிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
கொரோனா பெருந்தொற்றின் பரவல், இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை. இருப்பினும், 2-வது அலையைப் போன்று 3-வது அலை மோசமானதாக இருக்காது. 3-வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவாா்கள் என்ற பொதுவான அச்சம் நிலவுகிறது. ஏனெனில், பெரியவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா், குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.
ஏற்கனவே 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளை கொரோனா தொற்று தாக்கியதாக செரோ ஆய்வு முடிவு கூறுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிடும். அதன்பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா தொற்று ஏற்பட்டால், அது தீவிரமான பாதிப்பாக இருக்காது. கொரோனா தொற்று தாக்கினாலும், மரணத்தில் இருந்து தடுப்பூசி காப்பாற்றுகிறது. இப்போதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே. அதனால்தான் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தொடா்ந்து கூறுகிறோம் என்றார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா த
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மருத்துவ சிக டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரி கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூர வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செ காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன் பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப
