கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஹைதியின் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 29 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த சில மாதங்க
ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா
உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்
சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாக
ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்
இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து
உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர
