இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு்ள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி இரவு பகலாகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்த நாளில் நாம் அனைவரும் இருகரம் கூப்பி வணக்கம் செலுத்தி - நன்றிக் காணிக்கை செலுத்த வேண்டிய மிக முக்கியமான கடமையில் இருக்கிறோம்.
சுதந்திரப் போராட்ட தியாகிகளின் தியாகம் இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் நெஞ்சத்திலும் குடிகொண்டிருக்கிறது.
ஆயுதமின்றி - அறவழி ஒன்றையே தங்களின் தொய்வில்லா போராட்டமாக நடத்திக்காட்டி இந்தியாவிற்கு ஜனநாயகக் காற்றை சுவாசிக்க கிடைத்த இந்தச் சுதந்திரம் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அரியதொரு கருவூலம்.
தமிழ்நாடும், இந்தியத் திருநாடும் எல்லாத் திக்குகளிலும் புகழ் பெற்றிடப் பாடுபடுவோம் - அயராது உழைத்திடுவோம் என்று 75-வது சுதந்திர தினத்தில் அனைவரும் சபதமேற்போம். வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட
தீனதயாள் சேவை மையம், உலக கலை விளையாட்டு கூட்டமைப்பு, மத
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் நிறைய புகார்கள்
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழர
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந
