பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச்செய்தியை பா.ரஞ்சித் பரப்பியதாகவும், அந்தக் காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல உண்மையை ஒப்புக்கொள்ளா விட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்த
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவர
300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.
தமிழ் சினிமாவின் உ
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொ
கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட
