ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மக்கள் பலர் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். ஆனால் விமான சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் காபூலை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தலிபான்களுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
அதேசமயம், காபூலில் தலிபான்கள் வீடு வீடாக சோதனை நடத்துகின்றனர். அரசியல் தலைவர்கள், ராணுவ வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தலிபான்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் இருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் நாடுகடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்’ என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐகà¯
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாà
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைவது குறித்து பெலார உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி க ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம௠ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்à® லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’ ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்à உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுà துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அà®
