பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல் இருந்து வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு பாக்கியலட்சுமி என்று மனைவியும், மதுமிதா (20), மலைராஜா என்ற 2 பிள்ளைகளும் உள்ளனர். மதுமிதா தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், ஆறுமுகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இதனால் பாக்கியலட்சுமி, மேக்கூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வைத்து பிள்ளைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், தந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருந்த மதுமிதா, அவர் இறந்ததால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் காலை, மதிய என 2 வேளையும் உணவு சாப்பிடவில்லை. மதியம் வீட்டில் படுத்து தூங்கிய மாலை நீண்ட நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பாக்கியலட்சுமி மதுமிதாவை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மதுமிதாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நில
முதல்-மந்திரி
புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி 2 தவணை
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக 1986-ம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதில கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூச பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்ப தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக
