டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கல பதக்கம் வென்றார். இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாராமுகியா என்ற கிராமத்தைச் சேர்ந்த லவ்லினாவிற்கு அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் வழங்கியுள்ளார்.
மேலும் அசாம் மாநில முதல் மந்திரி ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவிற்கு அறிவித்துள்ள பரிசுகள் பின்வருமாறு:
அசாமில் முதன் முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த லவ்லினா 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதை கனவாகக் கொண்டுள்ளார். இதனால் அதுவரை இவருக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், கவுகாத்தியில் உள்ள ஒரு சாலைக்கு லவ்லினாவின் பெயர் சூட்டப்படும். இதையடுத்து, லவ்லினா பதக்கம் வெல்ல காரணமாக இருந்த இவரது பயிற்சியாளர்களான பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங், ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் சார்பாக ரூ.10 லட்சம் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். லவ்லினா வசிக்கும் கிராமத்தில் குத்துச்சண்டை அகாடமி வசதியோடு விளையாட்டு வளாகம் அமைய உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதி
ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை க
ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சி
திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை
கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ
