கோப்பாய் சமிக்ஞை விளக்கு சந்தியில் இரண்டு கனரக வாகனங்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனமும் கோப்பாயில் இருந்து கைதடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்கு சேதமடைந்து தொலைத்தொடர்பு கம்பம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது.
சமிக்ஞை இலக்கங்கங்கள் ஒளிர்ந்து கடைசி மூன்று செக்கன்கள் முடிவடையும் நிலையில் மற்றைய பகுதிக்கு செல்வதற்காக வேகமாக பயணித்த இரண்டு கனரக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதி ஒருவர் காயமடைந்தார்.
குறித்த சம்பவத்தில் சமிக்ஞை விளக்கு பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரும் மயிரிழையில் உயிர் தப்பியதுடன் இவற்றின் காரணமாக போக்குவரத்தும் சிறிது நேரம் தடைபட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அத
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்ட
இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை
சாவகச்சேரியில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற
நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் இன
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒ
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள கறுவங
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (
எதிர்வரும் மூன்று வாரங்கள் மிகவும் ஆபத்தானவை என இராணு
வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு
அபூதாபியிலிருந்து திருகோணமலை துறைமுகம் நோக்கிச் சென
கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்
