வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் என்று திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஊதாரித்தனமான முன்னாள் அரசு என்று பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பத்திரிகை சுதந்திரத்தை பற்றி பேசும் ஸ்டாலின், நமது அம்மா நாளிதழ் அலுவலகத்தில் அத்துமீறி லஞ்ச ஒழிப்புத்துறை ஏவியுள்ளார்.
பத்திரிகை சுதந்திரத்தை காலில் போட்டு நசுக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றிவிட்டது . வெள்ளை அறிக்கையின் போது உண்மைக்கு புறம்பான தகவலை நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கிறார்.வாக்குறுதி அளித்துவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். அதிமுகவினர் பொய் வழக்குகளை போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம், பொய் வழக்குகளை கண்டு அதிமுக அஞ்சாது” என்றார்.
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்த
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ம
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ
திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் ச
தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்