கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்யும் போது, இறந்தவரின் குடும்பத்தினரிடம் எவ்வித கட்டணங்களையும் அறவிடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கட்டணங்களை அறவிட வேண்டாம் என உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் செலவாகும் பணத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் பிரதானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.
தொமர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
உடல்களை தகனம் செய்ய தேவையான எரிவாயுவை மிக விரைவில் இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
நாடு முழுவதும் 240க்கும் மேற்பட்ட சுடுகாடுகள் இருப்பதால், எவ்வித பிரச்சினையும் இன்றி கொரோனாவால் இறப்போரின் உடல்களை தகனம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை ம
கண்டி -ஹபுகஸ் பகுதியில் வீட்டின் பின்புறம் ஏற்பட்ட மண
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட
கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
அலரிமாளிகைக்கு அருகில் மற்றும் காலி முகத்திடலில் அமை
