முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுஹாசினி. பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார். நடிப்பு, இயக்கம், தயாரிப்பாளர் எக பன்முக திறமைக்கொண்டவராக திரையுலகில் செயல்பட்டு வருகிறார். பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியான இவர், தனது 60வது பிறந்தநாளை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், 80 மற்றும் 90-களில் நடித்த முன்னணி நடிகர், நடிகைகளாக இருந்த கமல்ஹாசன், நடிகை ஜீவிதா, பாக்யராஜ், குஷ்பு, மோகன், ஷோபனா, அம்பிகா, பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களைக்கூறி சிறப்பித்துள்ளனர். இந்த பிறந்தநாள் நிகழ்வின் போது நடிகை சுஹாசினி நடனம் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
நடிகை சுஹாசினி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிக கவனம் பெற்றவையாக மாறி வலம் வருகிறது.