ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டரில் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் அவர் கஜகஸ்தான் நாட்டுக்கு சென்றதாக மற்றொரு தரப்பு தகவல்கள் தெரிவித்தன.
ஆனால் கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அஷ்ரப் கனி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இதற்கிடையில் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் ஆப்கானிஸ்தானின் பிற தலைவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் நாடும் அஷ்ரப் கனி தங்கள் நாட்டில் இல்லை என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அஷ்ரப் கனி தற்போது ஓமன் நாட்டில் இருப்பதாகவும் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்திருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்
உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்
ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில
மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மாநிலத்தின் சில இடங
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம்
சர்வதேச பெண்கள் தினம் நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
நோட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள
ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்
அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபத
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
பாகிஸ்தானில் காதல் பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் 4 வயத
அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ