More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - கமல்ஹாசன்...
உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - கமல்ஹாசன்...
Aug 27
உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - கமல்ஹாசன்...

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கட்சி கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டது. பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்ற அந்தக் கட்சி சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் வெற்றியை நெருங்கி வந்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.



தேர்தலுக்கு பின் கட்சியின் தலைமை நிர்வாகிகள் சிலர் வெளியேறினார்கள். இதனையடுத்து கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்த கமல்ஹாசன் அடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகும்படி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார்.



இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.



இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நேற்று நடந்தது. 



உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது கூட்டணியுடன் போட்டியிடுவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்த‌தாக கூறப்படுகிறது.



மேலும், உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என கமல்ஹாசன் தெரிவித்ததாக தகவல் வெளியானது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்கà

Mar08

கிழக்கு லடாக்கில் கடந்த மே மாதம் ஏற்பட்ட பதற்றம், அதைதà

May04

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரà

May25

கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குறà®

Nov17

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டை

Jul06

சேலத்துக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நே

Oct09

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை தà

Oct04

தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுளà¯

Jan07

அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகைà

Sep15
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:43 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (06:43 am )
Testing centres