அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹரி படங்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கும் அருண்விஜய்யின் அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அதன்பின் ஹரியை தொடர்பு கொண்டு, படத்தில் நடிக்க முடியாத காரணத்தை விளக்கினார்.
எனக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆதலால் எனக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு படப்பிடிப்பை நடத்துங்கள் என்று இயக்குநர் ஹரியிடம் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து எல்லா மொழிகளிலும் பிசியாக இருக்கும் சமுத்திரகனி, அருண் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு
பிரபல தொகுப்பாளினியான பிக்பாஸ் பிரியங்கா தனது தந்தைய
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் அவரே பாடியுள்ள மூப்பில்ல
