இலுப்பைக்கடவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று (27) காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டல குளம் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி 250 ஏக்கர் உள்ளது.
இக் காணி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு முறையாக காணி கச்சேரியும் நடைபெற்றுள்ளது.காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்புடன் பல கலந்துரையாடல்களும் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நடை பெற்றுள்ளது.
எனவே தனி நபர்களின் காணி துப்புரவாக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு ஏக்கர் வீதம் காணி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் .பின்னர் ஏனையவர்களுக்கு வழங்குங்கள் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15
புதிய காவல்துறை காவல்துறை ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட கா
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
