டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப் பதக்கம் வென்றவர் ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஸ்கினா. அவர் தனது வெற்றியின் ரகசியம் குறித்து பரபரப்பு பேட்டி அளித்திருக்கிறார்.
தனது வெற்றியின் ரகசியம் உடலுறவு தான் என்று அவர் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவில் இருந்து வெளிவரும் ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
அவர் மேலும் ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், உடலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். ஆனால் உடலுறவு கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்று நம்பினால் நீங்கள் அதை மேற்கொள்ளலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு உடலுறவு நல்ல பலனைக் கொடுக்கும். உடலுறவின் மூலம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோசம் கட்டுப்படுத்தப்படுகிறது. அப்படி கட்டுப்படுத்தப் படுவதால் அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.
தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத உறவை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு அவர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள அல்லா சிஷ்கினா,
நான் பொதுவாகவே மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்புவேன் அப்படித்தான் என் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த போது, உடலின் அதிக சக்திக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அது உடலில் உடலுக்கு அதிக சக்தி கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும். அதிக சக்தி கிடைக்க உடல் உறவுதான் முக்கிய பங்காற்றுகிறது என்பதை தெரிந்து, அதை அனுபவ பூர்வமாகவும் உணர்ந்துகொண்டேன். அதனை நான் பின்பற்றினேன். அதனால் விளையாட்டில் அதிக சக்தியுடன் விளையாடி வெற்றியும் பெற்றேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.