ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, பி.வி.சிந்துவுக்கு விருந்துடன் கூடிய ஒரு பாராட்டு விழாவை நடத்தி உள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, சிரஞ்சீவி தனது நண்பர்கள் வட்டாரத்திலிருந்து பலரையும் அழைத்திருந்தார்.
குறிப்பாக தமிழ் நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பி.வி.சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், ஒலிம்பிக்கில் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு சிந்துவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப
விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்ட
நடிகை ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக
நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள்
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க
