முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜி-20 மாநாட்டிற்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளை முன்னிட்டு கூறியிருப்பதாவது:-
இந்தியா எப்போதுமே திறமையாகவும், உணர்திறன் கொண்டதாகவும், எச்சரிக்கையாகவும், அடக்கமாகவும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என சர்தார் வல்லபாய் பட்டேல் விரும்பினார். அவர் எப்போதும் தேச நலனுக்கு முன்னுரிமை அளித்தார்.
இன்று அவரிடமிருந்து உத்வேகத்தைப் பெற்று, நாடு வெளிப்புற மற்றும் உள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக மாறி வருகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில் பல சகாப்தங்களாக உள்ள பழமையான தேவையற்ற சட்டங்களில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளது.
நிலம், நீர், காற்று, விண்வெளி என அனைத்து துறைகளிலும் இந்தியாவின் திறன்கள் மற்றும் உறுதிப்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் உள்ளது.
ஒரே பாரத், சிறந்த இந்தியா என்பதற்காக தனது உயிரைக் கொடுத்த சர்தார் பட்டேலுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. பட்டேல், வரலாற்றில் மட்டும் அல்ல அனைத்து இந்தியர்களின் இதயங்களிலும் வாழ்கிறார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன் தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ சேலம் உ மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற் நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்)
