விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சகுராய் தனியார் விமான சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோர் இன்று (11) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 53 வயதான இரத்மலானையை வசிப்பிடமாகவும் மற்றையவர் 46 வயதான ஹொரணையை வசிப்பிடமாகவும் கொண்டவர்களாவர்.
இந்த தனியார் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் அண்மையில் பயாகல மற்றும் கட்டானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டன. கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி இலங்கை விமானப்படையிடம் தொழில்நுட்ப அறிக்கையை கோரியுள்ளனர்.
மனித உயிருக்கு அல்லது வேறு ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட
ஹெட்டிபொல - தொலஹமுன பிரதேசத்தில் உள்ள இலங்கை கபடி ச
பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு
ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வாரத்திற்கு ஒரு மு
அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை