புகையிரத நிலைய அதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுள்ள 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று (13) மலையக புகையிரத சேவைகள் பாதிப்புக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.
புகையிரத நிலைய அதிபர்கள் உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமை, சாதாரண அட்டவணையை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு ஆசனங்கள் ஒதுக்கீடு செய்து அதன் பின்னர் புகையிரதங்கள் இரத்துச் செய்யப்படுகின்றன.
இதன் காரணமாக புகையிரத பயணிகளும் புகையிரத நிலைய அதிபர்களும் பாதிக்கப்படுவதாகவும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதக்க தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அரச ஊழியர்கள் என பலர் பாதிப்புக்குள்ளாகினர்..பாடசாலை மாணவர்கள் புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தினை அறியாது புகையிரத நிலையங்களுக்கு வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
.இதே நேரம் பயணிகள் சிலரும் தங்களது பயணத்தினை புகையிரத ஊடாக தொடர முடியாது பஸ் தரிப்பிடங்களை நோக்கி செல்வதனை காணக்கூடியதாக இருந்தன.நாளை முதல் தொடர் விடுமுறையொன்று காணப்படுவதனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சிவனொளிபாதமலையினை தரிசனம் செய்வதற்காக வருகை தரயிருந்த போதிலும் இவர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக இன்று புகையிரத நிலையத்தில் வழமைக்கு மாறாக விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறி
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 273 பேர் கடந்த 24 ம
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ
பெண்கள்இசமூக சிவில் செயற்பாட்டாளர்கள்இசிவில் அமைப்ப
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவி
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி த
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
WhatsApp சமூக ஊடக வலையமைப்பில் செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை
போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனத் தரிப்பிட பிரச்சி