இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு சுசந்த பெரேராவை நியமித்தமைக்கு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின்சாரசபையின் மரபுகளுக்கு அமைய அதிக சேவை மூப்பு உடைய மின் பொறியியலாளரே பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மரபுகளை மீறி தகுதி குறைந்த ஒருவர் பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மின்சாரசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு இந்த நியமனமே பிரதான ஏது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தகுதியில்லாத ஒருவரை பதவியில் அமர்த்திய இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகளே இந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தும் போது உரிய மரபுகளை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், அதனையும் மீறி சிலர் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வயோதிப தாயொருவருக்கு நேற்றைய தினம் வவுனியா நெடுங்கேண
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
இலங்கை எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்
இம்முறைகச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்இறு
கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர
வரலாறு கண்டிராத மோசமான நிலையை எதிர் கொள்ளப்போகின்றோம
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
இலங்கையின் அந்நிய செலாவணி வருமானத்தின் பிரதான வருமான
இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா
இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்