நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யாததால் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர்பவுன்ராஜ். இவர் இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி பெற்றார்.
வாக்காளர்களுக்கு முறையாக பணப்பட்டுவாடா செய்யததால் தான் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எடக்குடி கிராமத்து மக்களுக்கு பண பட்டுவாடா செய்யச்சொல்லி ஊராட்சி மன்றதலைவர் தங்கமணியிடம் கேட்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளை காரணம்காட்டி அவர் மறுத்திருக்கிறார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்கிறார் தங்கமணி.
ஏப்ரல் -5ம் தேதி அன்று இதுகுறித்து தங்கமனி காவல் நிலையைத்தில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 23ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தினை அனுகும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் தங்கமணி வழக்குக் தொடுத்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, பூம்புகார் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து, போலீசார் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்ன
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று புதுச்சேரி செல்கிறார்.
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.
தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான
தங்கத்தால் ஆன “தங்க கோவில்” என்றழைக்கப்படும் ஸ்ரீ
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவத
காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ப
