இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.” இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன. புதிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், மக்களின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிந்த போதிலும் இலக்கைத் தக்கவைக்க முடியவில்லை. அதற்கு மக்களின் செயற்பாடுகளே காரணமாகும்.
மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சுகாதார அமைச்சு, சுகாதாரப் பணியகம் மூலமாக பல்வேறு சுகாதார வழிகாட்டிகள், கட்டுப்பாட்டு வழிமுறைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் அதனை முழுமையாகப் பின்பற்றுவதில் சந்தேகம் உள்ளது. ஒரு சிறிய குழு தவறு செய்கின்றது.
இதனால் பெருமளவிலான மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதை சகலரும் கவனத்தில்கொள்ள வேண்டும். இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆனால், எப்போதும் மீண்டும் மோசமான கொரோனாத் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் போராடுகின்றோம் என்பதை சகலரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்
73 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கை திருநாட்டின
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களி
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொட
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாக
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பா
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு